அரசியல்வாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள்: ஜனக ரத்நாயக்க குற்றச்சாட்டு
நாட்டின் உள்ள அரசியல்வாதிகளே இன்று தீர்மானங்களை மேற்கொள்வதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் அல்லாமல், தங்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே அவர்கள் தற்போது தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் மாற்றங்கள் மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடுகள் இன்றி கடமை
இந்தநிலையில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் எஞ்சியுள்ள ஆணைக்குழு
உறுப்பினர்களும் அரசியல் தலையீடுகள் இன்றி தமது கடமைகளை தொடர வேண்டும் என்று
அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிசக்தித்துறை அமைச்சர் தனது கடமையை சரியாகச் செய்யவில்லை, அவர் ஆரம்பத்தில் இருந்தே தவறு செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை எரிமலை போன்றது. அது உள்ளிருந்து எரிகிறது. எனினும் அதை வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |