எரிவாயு வெடிப்புகளால் அரசியல்வாதிகளும் அச்சத்தில் : அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
சமையல் எரிவாயு கொள்கலன்கள் உட்பட வெடிப்புச் சம்பவங்களில் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பெருந் தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
ஜா-எலயில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் மாத்திரமல்ல, நான் உட்பட அரசியல்வாதிகளும் இதன் காரணமாக அச்சத்தில் உள்ளோம்.
நாங்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளோம். எரிவாயு புதிய விடயமல்ல., எமது வீடுகளில் இருக்கின்றது. இது முழு நாட்டுக்கும் பெரிய பிரச்சினை.
கடந்த காலங்களில் கிறீஸ் பூதங்கள் இருந்தன. இதனால், இப்படியான விடயங்களை வேறு கட்சிகளும் செயக் கூடும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri