நாட்டின் இன்றைய துக்க நிலைக்கு காரணமானவர்கள் அரசியல்வாதிகளே: சரத் பொன்சேகா
நாட்டின் இன்றைய துக்க நிலைக்கு காரணமானவர்கள் இந்த நாட்டின் அரசியல்வாதிகளாவர் எனவே அவர்கள் முதலில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (05.01.2023) நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரகலயவை மீண்டும் ஆரம்பிக்கவும் ஊழல் அரசியல்வாதிகளை ஆட்சியிலிருந்து விரட்டவும் இந்த நாட்டு மக்களிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம்
நாம் அரகலய என்று சொல்லும்போது 1971 அல்லது 1989 போன்ற கிளர்ச்சிகளைக் குறிக்கவில்லை. இந்த தேசத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அமைதியான போராட்டத்தை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கப்பட்ட மறுநாள் பாதாள உலக பிரமுகர் கஞ்சிபானை இம்ரான், நாட்டை
விட்டு தப்பிச் செல்லும் வரை அரச புலனாய்வுத் தலைவர் என்ன செய்து
கொண்டிருந்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



