கொழும்பில் குவிந்திருக்கும் அதிகாரங்களுக்காக போராடிய அரசியல்வாதி குறித்து மனோகணேசன் தகவல்
கொழும்பில் குவிந்திருக்கும் அதிகாரங்களை யாழ்ப்பாணம் முதல் அம்பந்தாேட்டை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையில் போராடிய ஒரு சிறந்த அரசியல்வாதி மங்கள சமரவீர என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம், கத்தோலிக்கர்களின் நாடு என மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்து வந்தார். அவர் பயணித்த வழியில் அனைவரும் இலங்கையர்களாக வாழ்ந்துகாட்ட வேண்டும்.
இலங்கை பெளத்தர்களுக்கு மாத்திரமான நாடு என ஒருபோது மங்கள சமரவீர ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம், கத்தோலிக்கர்ளின் நாடு என பகிரங்கமாக தெரிவித்து வந்தவர். அனைவரும் இலங்கையர் என்றே அவர் தெரிவித்து வந்தார். சிங்களவர்கள் அதிகம் வாழும் நாடு என்றே தெரிவித்து வந்தார். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
அதேபோன்று அதிகார பகிர்வு தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். சிங்கள மக்களின் அதிகாரத்தை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதுதான் அதிகார பகிர்வு அல்ல என்பதை தெரிவித்து வந்தார்.
மாறாக கொழும்பில் குவிந்திருக்கும் அதிகாரங்களை யாழ்ப்பாணம் முதல் அம்பந்தாேட்டை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற கொள்கையிலேயே இருந்தார். அவர் சிறந்த பெளத்தர்.
ஆனால் அரசியலுக்கு மதத்தை சம்பந்தப்படுத்தவில்லை. அரசியலில் இருந்து மதங்களை தனிப்படுத்தவேண்டும் என அவர் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்து வந்தவர். நாட்டில் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதும் அரசியலுடன் மதத்தை சம்பந்தப்படுத்துவதாகும்.
மேலும் தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும்போது அதற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட போராட்டங்களில் அவர் எங்களுடன் இருந்தார். அதேபோன்று பிற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரச்சினைகள் வந்தபோது முஸ்லிம் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்தார். அவ்வாறான தலைவர் இன்று யார் இருக்கின்றார் என கேட்கிறேன். அதனால் தமிழ் மக்கள் அவரை நன்றியுடன் நினைவுகூருகின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் மங்கள சமரவீர மரணிக்கவில்லை. அவர் எங்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் கொள்கையான இந்த நாடு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் நாடு என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam