கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்த தயார் - வியாழேந்திரன்

Government Kalmunai Viyalenthiran Srilanka muslium congress
By Rusath Sep 30, 2021 02:02 PM GMT
Report

தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக நல்லிணக்க அரசியல் உள்ளது .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ் அரசியல்வாதிகளும், கட்டிப்பிடித்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உட்பட ஒரு பிரச்சனையும் இல்லை என ஒரு வார்த்தை சொன்னால் நாளையே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam viyalenthiran) தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவடடம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பரிவில் 24 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(30) போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,


கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் சேவைகளை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்காக நாங்கள் பல வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. 2800 சதுரக்கிலோமீற்றர் கொண்டது மட்டக்களப்பு மாவட்டமாகும்.

இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு வரப்பட்ட வீட்டுத்திட்டங்களால் தற்போது அவை அரைகுறையாகக் கிடக்கின்ற. இதனால் பல சமூகப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இதனால் அந்த மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் அப்போதைய அரசாங்கம் தேர்தலுக்காக வேண்டி நிதிய அமைச்சின் அனுமதியின்றி, திட்டமிடல் உத்தியோகஸ்த்தர்க்கும், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர், பதவிகளையும் வழங்கினார்கள். தற்போது அவர்கள் தொழிலின்றி இருக்கின்றார்கள்.

அதேபோல் அப்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்காக வேண்டி எதுவித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வழங்கவில்லை. இறுதியில் அந்த அரசின் ஆட்சிக்காலம் முடிவுறும் தறுவாயில் இருக்கும்போது கம்பெரலிய யுத்தம் என்ற போர்வையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.

நான் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாதிருந்திருக்கும். மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. அப்போது 16 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருக்காவிட்டால் அப்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியிருக்க முடியும். நினைத்ததைச் சாதித்திருக்க முடிந்திருக்கும்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, உள்ளிட்ட விடையங்களைச் செய்திருக்க முடியும். முறையான இராஜ தந்திர அரசியல் முஸ்லிம்களிடத்தில் தான் உள்ளது. முஸ்லிம்களின் இறந்த உடலை எரிக்கக்கூடாது புதைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் போராட்டத்தில் இணைந்தார்கள், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். இதுதான் இராஜ தந்திரமாகும். தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக உள்ளது. நல்லிணக்க அரசியல் என்று கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ் அரசியல்வாதிகளும், கட்டிப்பிடித்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உட்பட அவர்கள் ஒரு பிரச்னையும் இல்லை என ஒரு வார்த்தை சொன்னால் நாளையே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்.

இதனைப் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும். படித்தவர்கள் விடும் பிழை எமது அடுத்த சந்ததியினரைப் பாதிக்கும். 72 வருட அரசியலில் 58.9 வீதமிருந்த கிழக்குத் தமிழர்களை 38 சத வீதத்திற்கு கொண்டு விடப்பட்டுள்ளது. பல தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.

25000 மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்கின்றார்கள். இந்த வாரம் மாத்திரம் 4 இற்கு மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கிலிருந்து சடலங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பாவங்கள் யாருக்கு வரும்.

பேஸ்புக் அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் கிழக்கில் அரசியல் இருபதைத் தக்கவைப்பதற்கான பயணத்தை நாங்கள் செய்கிறோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவடட அமைப்பாளர் ப.சந்திரகுமார், போதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாகி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்டமாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US