தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற தி.மு.க கட்சிக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 50 வீதத்திற்கு அதிக வாக்குகளைப் பெற்ற தி.மு.க கட்சிக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி-பூநகரியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டுத் தேர்தலை எடுத்துக்கொண்டால் தி மு க 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று வரும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில் முதலமைச்சராக ஸ்ராலின் அவர்கள் பொறுப்பெடுப்பார் என்று நம்புகின்றேன்.
அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் எமது மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத்
தெரிவிக்கின்ற அதே நேரத்தில், இலங்கையின் வடக்கு
மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கும் அவர் தீர்வு தருவார்
என்றும் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
