தமிழர்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றம்! - செல்வராசா கஜேந்திரன் எம்.பி
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குள் கிராம சேவையாளர் பிரிவுகளையும் கொண்டுசெல்வது என்பது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களை அபகரித்து, அதனை முழுமையாக சிங்களமயமாக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைபற்று பிரதேச சபை பிரிவில் இருக்கக்கூடிய கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, செம்மலை ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்குமாறு அரசாங்கத்தினுடைய உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகத்துக்கு அவசரமாக நேற்றையதினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இவ்வாறான ஒரு செயற்பாடு நடைபெறப்போகிறது என்பதை அறிந்து வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பல பிரதிநிதிகள் தொடர்புகொண்டு அதனைச் செய்யவேண்டாம் என்றும் அது தொடர்பான அமைச்சருடன் ஏற்கனவே பேசியிருக்கின்றோம்,
இந்த விடயம் தொடர்பாக ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தும் கூட கொழும்பினுடைய அழுத்தம் காரணமாக அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களை அபகரித்து அதனை முழுமையாக சிங்களமயமாக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam