நாட்டில் அரசியல் வன்முறை மீண்டும் ஏற்படும்: முன்னாள் பொலிஸ் அதிபர் எச்சரிக்கை
கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் குழுக்கள் எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்க முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இணைந்து இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.
1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் புனர்வாழ்வுத் திட்டங்களை பெருமளவிற்கு முன்னெடுத்தது.
மீண்டும் வன்முறை
எனினும் கிளர்ச்சி அத்தோடு முடிவடையும் என அனைவரும் நம்பினாலும், துரதிஸ்டவசமாக 1989 ஆம் ஆண்டு நாட்டில் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிக்கும் வன்முறைகள் மீண்டும் இடம்பெற்றதாக பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்தபோது, துரதிஸ்டவசமாக, 2022 மே 9 ஆம் திகதியன்று ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் ஒரே இரவில் 91 வீடுகள் அழிக்கப்பட்டன.
எனவே, இது போன்ற சம்பவங்கள எதிர்காலத்திலும் நடக்காதா? என்று சந்திரா பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |