மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் தொடர்பில் சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வரவேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி விசேடமாக கணியம் அதேபோன்று மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு சம்பந்தமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivaneshathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கும் நீரியல் பூங்கா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் இருக்கும் மீன், நண்டு, இறால் வளர்க்கக்கூடிய இடங்களைச் சரியாக அடையாளப்படுத்தி, முயற்சியுள்ள மக்களுக்குப் பகிர்ந்தளித்து, அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைத்து முதலீட்டை அதிகரித்து, இதன் ஊடாக வேலை வாய்ப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த வருட இறுதிக்குள் இவற்றை இடம்பெறச் செய்வது என்றும், அதிலும் விசேடமாக அதிகூடிய வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதோடு உள்நாட்டிலுள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கக் கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அதற்கான ஆரம்ப பூர்வாங்க வேலைகளை எப்படிச் செய்வது என்றும் தேவையான துறை சார்ந்த அனுமதிகளையும் அல்லது சட்ட ரீதியாக உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விரைவுபடுத்தி அதற்கான ஆவணங்களை அபிவிருத்தி குழுவிற்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.



மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 16 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan