அரசாங்கத்திற்குள் இருந்தால், அரசை விமர்சிக்கக்கூடாது! - ரோஹித்த அபேகுணவர்தன
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்றால், அரசாங்கத்தை விமர்சிக்காது இருக்க வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்திற்குள் போதிய முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை என தயாசிறி ஜயசேகர சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தயாசிறி ஜயசேகர முக்கிய அமைச்சுப் பதவியை வகித்தார். அந்த அரசாங்கத்தால் செய்ய முடியாத பலவற்றை தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது.
தயாசிறி ஜயசேகரவுக்கு இருக்கும் பிரச்சினை என்ன என்பது எனக்குப் புரியவில்லை எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri