இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு.. வாக்குறுதி கட்டாயம் நிறைவேறும் - ரில்வின் சில்வா
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பன உட்பட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மாகாண சபை முறைமை
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினையைத் தீர்த்துத் தேர்தலை நடத்த வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண சபை முறைமை தீர்வு அல்ல என்ற போதிலும் தற்போது அந்த முறைமை இருப்பதால் அதில் கைவைக்கப்படாது எனவும், புதிய அரசமைப்பு ஊடாக தற்போது இருப்பதைவிட சிறப்பான தீர்வு வழங்கப்படும் எனவும் நாம் உறுதியளித்துள்ளோம். இந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
