ரணில் ஜனாதிபதியாவதற்கான அரசியல் நிலைமை இல்லை: குணரட்ணம்(Video)
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கான அரசியல் நிலைமை இலங்கையில் இல்லை என முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் பிரேமகுமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“2019 ஆம் ஆண்டு கோட்டாபயவிற்கு இருந்த மக்கள் ஆதரவு இப்போதில்லை. இவர் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஊடாகத்தான் இந்த பதவிக்கு வந்தார்.
ஆனால் தற்போது மக்கள் ஆதரவை இழந்து நாட்டை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற நெருக்கடியை பயன்படுத்தி கோட்டாபயவினால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க

தற்போது மக்கள் வேண்டாம் என சொல்லும் பொதுஜன பெரமுன கட்சியின் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்றோருடன் இணைந்து ஜனாதிபதியாக திடடம் தீட்டுகிறார்.
இருப்பினும் அவர் ஜனாதிபதியாவதற்கான அரசியல் நிலைமை இலங்கையில் இல்லை.” என கூறியுள்ளார்.