சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Jaffna Northern Province of Sri Lanka
By Thevanthan Oct 06, 2026 08:47 AM GMT
Report

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (07.10.2026) முதல் 12ஆம் திகதி வரை (12.10.2026) வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், நாளை காலை 9 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தின் ஊடாக இடம்பெறும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். .

அதன் பின்னர் மாற்று வழித்தடத்தின் ஊடாக பேருந்து சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள்

சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு | Notice Issued Traveling Via The Sangupiddi Bridge

இதன்படி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி, அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்கள் சேவை நோக்குடன் மாற்று வழித்தடத்தில் பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 12ஆம் திகதி வரை

எனினும், அதிகரிக்கும் பயணத் தூரத்தை கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும், இதனை பயணிகள் கருத்திற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு | Notice Issued Traveling Via The Sangupiddi Bridge

எனவே, நாளை முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சங்குப்பிட்டி பாலத்தைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞானசார தேரரின் பரிதாப நிலை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஞானசார தேரரின் பரிதாப நிலை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

லசந்த விக்ரமதுங்க யாரென்று தெரியாத தமிழருக்கு CID செய்த கொடூரம்!

லசந்த விக்ரமதுங்க யாரென்று தெரியாத தமிழருக்கு CID செய்த கொடூரம்!

you may like this video


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US