ஞானசார தேரரின் பரிதாப நிலை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சாதாரண வெள்ளை நிற உடையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மற்றொரு வழக்குக்காக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சிறைக் கைதிகளுக்கான உடை அணிவிக்கப்பட்டே இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதிகளுக்குரிய சீருடை நேற்று முதல் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையருமான சேனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
காவி உடை அகற்றம்
தற்போது தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, உரிய ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

தேரர் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என அவர் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய ஆறு வருட காலத்தை அனுபவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri