மாணிக்கக்கல் அகழ்வு -புதையல் தோண்டிய ஞானசார தேரர்:கசியும் இரகசியங்கள்..
ஞானசார தேரர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சகாவுடன் இணைந்து புதையல் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக ஸ்வீடனின் 'எக்வடேரா' (Ekvatera) அமைப்பின் தலைவி சாமலி மதநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஞானசார தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்கள்... அதாவது 2014-இல் ரணில் ஆட்சிக்கு வருவதற்கு ஞானசார உதவி செய்துள்ளார்.
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட காணி
அந்தக் காலப் பகுதியில் ஞானசார தேரர் நாவலப்பிட்டி பகுதியில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்தார். எனது காணியில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலே அவர் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.
எனது காணியில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு ஞானசார தேரர் தொலைபேசியில் 'நோனா உங்கள் நிலத்தில் மாணிக்கக்கல் அகழ அனுமதிக்க முடியுமா?' என்றும். எனக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறினார். என்னை இலங்கைக்கு வரச்சொன்னார்.

அவர் என்னைப் பாதுகாப்பதாகக் கூறினார். மாணிக்கக்கல் அகழ்வதற்கு இந்த நிலத்தைத் தருமாறு கேட்டார். 2014 ஆம் ஆண்டின் இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு தேர்தல் நேரத்தில் தனபால என்பவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பணம் வழங்கியுள்ளார்.
இந்த நபர் இலங்கைக்கு ஸ்கேனர்களை (Scanners) கொண்டு வந்துள்ளார். இவர் ஞானசாரவுடன் இணைந்து இராவண மன்னனின் ஆயுதம் மற்றும் புதையல்களைத் தேடியுள்ளார்கள். அந்தப் காலப் பகுதியில் தான் ஞானசார மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! 56 நிமிடங்கள் முன்
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam