அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து வேட்டை
அரசியல் கைதிகள் மற்றும் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை துரிதப்படுத்த கோரி, வடக்கு - கிழக்கு மாகாணங்களை தழுவிய பிரதேசங்களில் நாளைய தினம் (28) மாபெரும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த போராட்டத்திற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள், தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசியல் கைதிகளையும் மற்றும் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அந்த உறுதிமொழி இதுவரை காலமும் செயற்படுத்தப்படாமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர் மேலும்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri