உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அரசியல் கைதிகள்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட மூன்று கைதிகளும் இன்றையதினம், வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று தமிழ் கைதிகள், கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் அதற்கு ஆதரவாக அவர்களுடைய உறவினர்களால் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை (25) வடக்கு மாகாண ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து கைதிகளின் உறவினர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர் யாழ். சிறைக்கு வருகை தந்து ஆளுநரின் உறுதிமொழியை உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடும் கைதிகளிடம் விளங்கப்படுத்தியதையடுத்து
சிறைச்சாலையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மூன்று
கைதிகளும் தற்காலிகமாகத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக உறவினர்கள்
கூறியுள்ளனர்.



