மஹிந்த தலைமையில் கூடிய 'மொட்டு'வின் அரசியல் குழு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (06.03.2026) பிற்பகல் நடைபெற்றது.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
பங்கேற்றோர்
மேலும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri