ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பெண் சிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்சவுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல்வேறு பிரச்சார குழுக்களால் தீவிர பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரை பெண் சிங்கம் எனப் பெயரிட்டு முன்னிலைப்படுத்துவதால், அக்கட்சிக்குள் பல சலசலப்புகள் மற்றும் மோதல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படையில், பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரமானது ராஜபக்ச குடும்பத்தின் இரத்த உறவுகளிடமிருந்து அகற்றப்படும் நிலைமை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் சிங்கம்
தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள சமல் ராஜபக்சவின் 2 புதல்வர்கள், மகிந்த ராஜபக்சவின் 3 புதல்வர்கள், கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மற்றும் பசில் ராஜபக்சவின் 3 புதல்விகள் ஆகிய அத்தலைமுறையின் 09 இரண்டாம் நிலை வாரிசுகள் உள்ளனர்.

அவர்களை ஒதுக்கிவிட்டு, லிமினி ராஜபக்சவை முன்னிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரை தொடர்புபடுத்திய பிரச்சாரங்கள் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருடன் அவரை ஒப்பிட்டு, வரலாறு மீண்டும் திரும்புகிறதா என மொட்டுக் கட்சியின் பிரதான உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri