இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Erimalai May 25, 2024 04:18 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலுக்கான (Presidential Election) ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாட்டில நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

சர்வதேச சக்திகள் 

மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் தொடர்பாக இலங்கை (Sri Lanka) தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும் இலங்கை தீவில் நலன்களை கொண்ட சர்வதேச சக்திகள் நன்றாகவே குழம்பிப்போய் உள்ளனர்.

அவற்றின் கவலையெல்லாம் இவ்வளவு காலமும் கட்டிய கட்டிடங்களையெல்லாம் புதிதாக கட்ட வேண்டி வருமோ என்ற அச்சம் தான்.

இலங்கைத் தீவு தொடர்பாக சர்வதேச சக்திகள் இரண்டு அணிகளாக போட்டியில் இறங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். அமெரிக்க தலைமையிலான இந்தோ - பசுபிக் மூலோபாயகாரர்கள் ஒரு அணி.சீனா தலைமையிலான பாதை - பட்டிகாரர்கள் இன்னோர் அணி.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | Political Analyst Yodhilingam Sl Election

ஒரு காலத்தில் ஒரு அணி மேல் நிலையிலும் இன்னொரு காலத்தில் மாற்று அணி மேல்நிலையிலும் இருக்கும் நிலையும் தோற்றம் பெற்றது. தற்போதைய சூழலில் இந்தோ - பசிபிக் மூலோபாயக்காரர்களே மேல் நிலையில் உள்ளதாக பேசப்படுகின்றது.இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் போன்ற இந்தோ - பசுபிக் மூலோபாயக்காரர்களின் சார்பு நிறுவனங்கள் இலங்கைத்தீவை அழுங்குப் பிடியில் வைத்திருக்கின்றன.

வேட்பாளர்கள் 

பல்வேறு உதவிகள,, ஒப்பந்தங்கள் என்பனவும் இக்கட்டிப் போடலில் துணை புரிந்து இருக்கின்றன. இப்போது இந்தோ - பசுபிக் மூலோபாயகாரர்களின் கவலையெல்லாம் இதனை தொடர்ச்சியாக தக்க வைப்பது எவ்வாறு என்பதே.

ரணிலையும், சஜித்தையும் இணைப்பதற்கு திரை மறைவிலும் வெளிப்படையாகவும் பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | Political Analyst Yodhilingam Sl Election

எனினும், சஜித் பிரேமதாச அசைவதாக இல்லை. அரசியல் தற்கொலை செய்வதற்கு சஜித் பிரேமதாச அரசியலில் கற்கும் குழந்தை அல்லவே. பாதிப்பை குறைப்பதற்காக கருஜெய சூரியாவை பொது வேட்பாளராக இறக்கும் முயற்சியும் நடந்தது. அதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இன்று மற்றைய போட்டியாளர்கள் இருவரும் பகிரங்கமாக தம்மை வேட்பாளர்களாக அறிவித்து விட்டனர். ரணில் விக்ரமசிங்க மட்டும் இன்னமும் அறிவிக்காது இருக்கின்றார். மேற்குலகம் எதையாவது செய்யும் என அவர் நம்பக் கூடும். 

இந்நிலையில்,ஐக்கிய மக்கள் சக்தியை உடைத்து ஒரு பகுதியை தம்பக்கம் இழுக்காமல் ரணில் விக்ரமசிங்கவினால் ஒருபோதும் தன்னை நிலை நிறுத்த முடியாது. 

தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை இதுவரை கிடைக்கவில்லை

தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை இதுவரை கிடைக்கவில்லை

தமிழ்ப் பொது வேட்பாளர்

தென்னிலங்கை களநிலவரம் இவ்வாறு கலங்கிய நிலையில் இருக்கின்ற சூழலில்தான் தமிழர் தாயகத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்கள் எப்போதும் அனுபவ ரீதியாக செயல்படுவதே வழக்கம். சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து எந்தவித பயனும் இல்லை என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர.; இதனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலையே உள்ளது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக சம்பந்தன் - சுமந்திரன் தலைமையின் இணக்க அரசியல் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்தது. இது ஒரு வகையில் சிங்கள அரசியலின் தோல்வி எனலாம.;

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | Political Analyst Yodhilingam Sl Election

கொழும்பு மைய கருத்துருவாக்கிகள் தமிழ் பொது வேட்பாளரைப் எதிர்க்கின்றனர.; தமிழர் தாயக மைய கருத்துருவாக்கிகள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர். கொழும்பு கருத்துருவாக்கிகளின் இருப்பு கொழும்பு சார்ந்தது. எனவே அவர்களது எதிர்ப்புக் கருத்துக்கள் எதிர்பார்க்கக் கூடியவையே

காணிப்பறிப்பு, மொழிப்பறிப்பு, பொருளாதார சிதைப்பு, கலாச்சார புறக்கணிப்பு என்பன தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இன அழிப்பு இலங்கை அரசின் திட்டமாக இருப்பதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதனை செய்து கொண்டே இருக்கும்.

இன்னோர் பக்கத்தில் பச்சை ஆக்கிரமிப்பையும், தீர்வைத் தர தயார் இல்லை என்பதையும் மறைப்பதற்காக பொருளாதாரப் பிரச்சினையை மட்டும் தூக்கிப்பிடிக்க முனைகின்றது. இன பிரச்சினையை நிலவிரிப்புக்குள் தள்ளுகின்றது.

இனப்பிரச்சினை விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு மென்அழுத்தத்தை கொடுக்க விரும்புகின்றன. தமிழ் மக்களை தங்கள் நலன்களுக்கு கறிவேப்பிலைகள் போல பயன்படுத்தவே முனைகின்றன.

தீவிரமடைந்துள்ள காலநிலை: நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தீவிரமடைந்துள்ள காலநிலை: நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

அரச புலனாய்வுத்துறை 

இன்னோர் பக்கத்தில் சமூக சிதைவு அரசினால்;; திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. போதை வஸ்து பாவனை, வாள்வெட்டு என்பன ஒரு கலாச்சாரமாக பரவத் தொடங்கியுள்ளது. அரசபுலனாய்வுத்துறை இதனை திட்டமிட்டு வளர்க்கின்றது.

இந்தப் புறநிலை அரசியலிலும் அகநிலை அரசியலிலும் ஆக்கபூர்வமான முறிவை ஏற்படுத்த வேண்டும்.ஜனாதிபதி தேர்தல் அதற்கான வலுவான சந்தர்ப்பத்தை தந்துள்ளது.

ஒடுக்குமுறை அரசின் ஜனாதிபதி தேர்தலையே தமிழ் மக்கள் தமது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | Political Analyst Yodhilingam Sl Election

முதலில் இந்த ஒடுக்குமுறை அரசினை சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். இன அழைப்பை மேற்கொள்ளப் போகின்ற ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்துக்கொண்டு அரசின் மீதான அம்பலப்படுத்தல்களை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது.

ஒடுக்கப்படும் தேசிய இனம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.சிதைந்து போய் இருக்கும் தமிழ்ச் சமூகத்தை ஐக்கியப்படுத்தி ஒரு கட்டுறுதியான அரசியல் சமூகமாக மாற்ற வேண்டும்.

மொத்தத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ் அரசியலை வழி தடத்தில் ஏற்றும் முயற்சி. வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை என்பதை தமிழ் தரப்பு புரிந்து கொள்வது அவசியம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்கு

பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US