பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு இணங்காத நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பு வழங்க மறுத்தால் அந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டு வேறும் முதலீட்டாளர்களிடம் தோட்டங்கள் ஒப்படைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்த சம்பளம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1350 ரூபாவாக உயர்த்தவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனமொன்று சம்பளத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தால் அது குறித்து விசாரணை செய்ய நிதி அமைச்சு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
