படையினரின் செயற்பாடு: போராட்டக்கள பெண்களின் ஆதங்கம்(Video)
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவதாக கூறிய பின்னரும் படையினர் எங்களை தாக்கினார்கள். போதை பொருள் பாவனையில் சுயத்தை இழந்த படையினர் பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை தாக்கினார்கள் என காலிமுகத்திடல் போராட்டக்கள பெண் கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,"எமது நாட்டையும் நாட்டின் வளங்களையும் ராஜபாக்ச குடும்பம் அழித்து இப்போது நாட்டை படுகுழிக்குள் தள்ளியுள்ளார்கள். நாங்கள் அவர்களை அடித்து துரத்தினோம்.
பின்னர் நாட்டிற்கு ஒரு நல்ல ஜனாதிபதி வேண்டும் என்று கூறினோம் ஆனால் மறுபடியும் மோசமான ஆட்சியே அமைக்கபட்டுள்ளது.
நாங்கள் உங்களுடைய காசு, பணத்தை கேட்கவில்லை. பிள்ளைகளுக்கான கல்வி, உணவு பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருள் என்பவற்றை வழங்கி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும்"என தெரிவித்துள்ளார்.



