மேல் மாகாண மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் பொது மக்கள் உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்களா என பரிசோதிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனையின் போது சுகாதார ஆலோசனைகளை மீறிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸாரினால் விசேட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நேற்று முன்தினம் முதல் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சுகாதார வழிக்காட்டல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சுற்றிவளை நடவடிக்கைக்காக 437 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam