மாங்குளம்- வீதியில் பொலிஸாரின் வாகனம் தடம்புரண்டு விபத்து!
முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(30) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வாகனத்தினை மீட்டு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அறிவுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகாரித்து காணப்படுகின்றது.

இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam