அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெற நாடாளுமன்றம் செல்லும் பொலிஸார்
கடந்த மே மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் இழப்புகள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸார் நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளனர்.
மே வன்முறை
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மற்றும் அதற்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் சுமார் 88 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

நாடாளுமன்றம் செல்லும் பொலிஸார்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இழப்பு விபரங்கள் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ள கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளனர்.

கடந்த 23ம் திகதியும் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
எஞ்சியவர்களிடம் எதிர்வரும் 9ம் திகதி வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri