நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை- பொலிஸ் தரப்பு
தற்போதுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து பகுப்பாய்வு செய்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அவசியம்
அதன்படி, அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பிறகு, கூடுதல் பாதுகாப்பு அவசியம் என்பது உறுதிசெய்யப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கிகள் வழங்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam