72வது உலக அழகி போட்டியில் களமிறங்கியுள்ள இலங்கை யுவதிக்கு பொலிஸின் ஆதரவு!
72வது உலக அழகி போட்டியில் போட்டியிடும் பொலிஸ் அதிகாரி ஹேமந்த குணசேகரவின் மகள் அனுதி குணசேகரவுக்கு, இலங்கை பொலிஸ் ஆதரவை திரட்டியுள்ளது.
சர்வதேச நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதியாக அவரை அங்கீகரித்து, இந்த வாரம் ஒரு வாழ்த்துச் செய்தி ஒன்று பொலிஸ் திணைக்களத்தினால் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டது.
சுற்றறிக்கை
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளியிட்ட சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக ஞாயிறு ஊடகம் ஒன்று கூறுகிறது.
சமூக ஊடகங்களின் மூலம் அனுமதியை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த சுற்றறிக்கை கோடிட்டுள்ளது.
இந்த இணைய ஆதரவின்படி, மிஸ் வேர்ல்ட் மொபைல் செயலியைப் பதிவிறக்குவது, வேட்பாளருக்கு வாக்களிப்பது மற்றும் அவரது பக்கங்களை லைக் செய்வது, கருத்து தெரிவிப்பது மற்றும் பின்தொடர்வன அடங்குகின்றன.
இந்தநிலையில், இந்த முயற்சி, இது தேசிய பெருமைக்குரிய விடயம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
72வது உலக அழகி போட்டி
இந்த செயல்பாட்டில் பொது நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான கடந்த கால விளம்பர முயற்சிகளுக்கு இணையாக, இந்த இணைய ஆதரவு முயற்சி அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 72வது உலக அழகி போட்டியில் இலங்கையின் பிரதிநிதியான அனுதி குணசேகர, நேருக்கு நேர் சவாலின் 20 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார்.
ஆசியாவின் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகவும் அவர் இடம்பெற்றுள்ளார்.
இந்தநிலையில், உலக அழகி விழாவின் இறுதிப் போட்டி அடுத்த சனிக்கிழமை, மே 31 அன்று தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
