தமிழர் பகுதியில் முதியவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி
மன்னார்(Mannar) அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 68 வயது முதியவரால் 14 வயது சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த எட்டு மாத காலத்திற்கு மேலாக சிறுமியை மிரட்டியே தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் சிறுமி தனது பெற்றோருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியபோதும் அவர்கள் இதுதொடர்பில் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார்
இந்நிலையில் பாடசாலை ஆசிரியர் ஊடாக இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கைது செய்துள்ளனர்.
குறித்த முதியவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கானது கடந்த 20.05.2025 அன்று நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதியவரை எதிர்வரும் 28.05.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
