காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: பெண் மருத்துவரின் 9 பிள்ளைகளும் பலி
காசா மீதான, இஸ்ரேலின் விமானத் தாக்குதல் ஒன்றில், பெண் மருத்துவர் ஒருவரின் 9 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண் மருத்துவர் பணி புரிந்த, கான் யூனிஸ் நகரில் உள்ள மருத்துவமனை, இதனை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், மருத்துவர் அலா அல்-நஜ்ஜாரின் பத்து குழந்தைகளில் 9 குழந்தைகள் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தையும் அவரது கணவரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த பெண் மருத்துவர் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவமனைக்கே சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில குழந்தைகளின் சடலங்கள் கடுமையான தீக்காயங்களுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு பாதிப்பு
எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு என்ற தகவல் தொடர்பில், மதிப்பாய்வு செய்யப்படுவதாக, இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.
இதேவேளை, நேற்று (24) நண்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தால் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |