சிந்துஜாவின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை: தாயார் விடுத்துள்ள கோரிக்கை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த (28.07.2024) அன்று உயிரிழந்த சிந்துஜாவிற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் குழந்தை பெற்று பின்பு இரத்தபோக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா வைத்தியர், ஊழியர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை நான்கு வழக்குகள் நடைபெற்று முடிந்துள்ளது.
நீதி
அடுத்த தவணை எதிர்வரும் (27.05.2025) ஐந்தாவது தடவை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றதாகவும் இதுவரை வைத்தியசாலை நிர்வாகம் சிந்துஜாவின் உயிரிழப்பிற்கு எந்தவிதமான உண்மையான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என தாயார் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்த செய்திகளை பார்த்தாவது எனது மகளிற்கு நீதி கிடைக்குமா என்று எதிர்ப்பார்ப்பதாக சிந்துஜாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
