பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற இரண்டு விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக, பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவரை உயர்நீதிமன்றம் குற்றவாளியாக கண்டறிந்துள்ளது.
சட்டவிரோதமான அறிக்கையை சமர்ப்பித்து,அவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ததன் மூலம், குறித்த விவசாயிகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விசாரணை
இந்தநிலையில் குற்றத்துக்கு உள்ளாகியுள்ள பொலன்னறுவை அரலகங்வில பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர் பண்டார, மனுதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் 30,000 ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஜூன் 6ஆம் திகதியன்று, பொலன்னறுவை-மஹியங்கனை பிரதான வீதியில் உள்ள கலுகெல சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்த மீறல்கள் நிகழ்ந்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
காட்டு யானைகள் தங்கள் வயல்களிலும் வீடுகளிலும் படையெடுப்பதை அதிகாரிகள் தடுக்கத் தவறியதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
