சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12000 எனவும் தற்பொழுது மொத்தம் 33000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளாக சிறைச்சாலைகள் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் அண்மைக் காலமாக கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது சேவைக் காலத்தில் சிறுவர்கள், முதியவர்கள், ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருவதனை பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்படுவதனால் உளவியல் பாதிப்புக்களினாலும் குடும்ப பிரச்சினைகளினாலும் கைதிகள் பாதிக்கப்படுவதனை தாம் நேரில் அவதானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
