நீர்கொழும்பில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்!
கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, 20 ஆவது மைல்கல் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு மேற்படி நபர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா - எல பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரே கைதானவர் ஆவார்.
அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் 9 கிராம் 715 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
