பசறையில் பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு: 13 பேர் கைது
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்புகளின்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள்
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், போதை மாத்திரைகளுடன் மூவரும், நீதிமன்றத்தால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும், பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இருவரும், பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம். விஜயரட்ணவின் வழிகாட்டலின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில்
முன்னிறுத்தப்படவுள்ளனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri