சந்திமாலின் விருந்துக்கு சென்ற பிரபல கலைக்குடும்பத்தின் மகளை தேடும் பொலிஸார்
அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாளை முன்னிட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் பிரபலமான கலைக்குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நட்சத்திர ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஹோட்டலின் முகாமையாளரிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்ற கடந்த 30ஆம் திகதி இரவு ஹோட்டலின் முகாமையாளராக சேவையாற்றிய நபரிடம் நாளை வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும், அந்த பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
பிரபல சிங்கள நடிகரும், இயக்குனரும், எழுத்தாளருமான ஜெக்ஸன் அந்தனியின் புதல்வி இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் கலந்து கொண்ட நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜெக்ஸனின் புதல்விக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam