பௌர்ணமி தினத்தில் யாழில் சிக்கிய பெருந்தொகை மதுபானம்
பௌர்ணமி தினமான நேற்றைய தினம்(26) யாழ்ப்பாணத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையத்தில் இருந்து பெருந்தொகையான மதுபானத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை நடைபெறுவதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5ஆயிரம் லீட்டர் சாராயம் மற்றும் 2ஆயிரத்து 500 லீட்டர் பியர் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்களையும் , கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.