திடீரென மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி! இன்டர்போலிடம் உதவிகோர திட்டம்
இலங்கையின் வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானமை தொடர்பில் திட்டவட்டமாக நிரூபித்தால் சர்வதேச பொலிஸாரிடம் உதவிகோரலாம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு கடன் செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடியாளர்கள் (ஹேக்கர்கள்) கைகளுக்குச் சென்றுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறை (CID) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
இன்டர்போலின் உதவியை நாட முடியும்
இவை திட்டவட்டமாக நிரூபித்தால், இலங்கை பொலிஸ் இன்டர்போலின் உதவியை நாட முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு சைபர் மோசடியாளர்கள் இலங்கையில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி முறைமைக்குள் ஊடுருவி (Hacking), 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதை நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தது.
இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு வழங்க வேண்டிய 22.9 மில்லியன் டொலர் கடன் தவணையில், 2.5 மில்லியன் டொலர் நிதியைத் திறைசேரி செலுத்தியுள்ளது.
கணினி முறைமைக்குள் ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள்
எனினும், கணினி முறைமைக்குள் ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள், போலி மின்னஞ்சல்கள் ஊடாக அந்த நிதியை வேறொரு கணக்கிற்குத் திசைதிருப்பி திருடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட உள்ளக விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடமை தவறிய குற்றச்சாட்டில் இரண்டு பணிப்பாளர்கள், ஒரு கணினி இயக்குபவர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராகத் தீவிர ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan