முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு(Puthukkudiyiruppu) பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தவறான முடிவெடுக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
விசுவமடு ரெட்பானா பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்த முடிவினை எடுக்க முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்
இது தொடர்ந்த நிலையில் இன்று(16) இரவு 7 மணியளவில் கணவன் தவறான முடிவெடுக்க வீட்டு அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.

இதனை அவதானித்த மனைவி அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் விரைந்து வீட்டு அறைக்கதவினை உடைத்து குறித்த நபரை மீட்டெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட குடும்பஸ்தர் உடையார்கட்டு மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri