தடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்த நபரை சுற்றி வளைத்த பொலிஸார்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த
சந்தேக நபர் நேற்றிரவு (18) கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவரிடம்
ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-சோலையடி பகுதியைச் சேர்ந்த சேனாதிராஜா கோபிநாத் (34 வயது) எனவும் தெரியவருகின்றது.
சோனியா டி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக பல நாட்களாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேகநபரை கண்காணித்து வருகின்றனர் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்து சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 2242 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் களவு மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்
ஒருவரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற
நீதிவான் இன்று(19) உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam