வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி - தப்பி ஓடிய சாரதி (photos)
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் வவுனியா - பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து

மோட்டார்சைக்கிளில் ஓமந்தையில் இருந்து பறனட்டகலில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குறித்த நபரை அதே திசையில் பயணித்த கார் மோதியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளதுடன் அவருடன் பயணித்த மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைப்பற்றல்
விபத்தினை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து காரினை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கார் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தடைப்பட்ட கல் உடைக்கும் தொழில்: தீர்வை எதிர்பார்த்து கல்குவாரி தொழிலாளர்கள்(Photos) |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri