மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு
நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளாய் பகுதியில் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸ் பாதுகாப்பு தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினை நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையேயான பிரச்சினையாக மாறியது.
இதனைத் தொடர்ந்து தோன்றிய வன்முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிலர் காயமடைந்தனர்.
இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்நிலையில் அங்கு நேற்றில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam