வவுனியாவில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் பயணத்தை மேற்கொள்ள அனுமதி
வவுனியாவில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் மக்கள் பயணத்தை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 வரை அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட பயண அனுமதிகள் நாடு பூராகவும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் மக்களின் நடமாட்டத்திற்கு பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.
அதன்படி 0, 2, 4, 6, 8 என்பற்றை அடையாள அட்டையின் இறுதி இலக்கமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
வவுனியாவின் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் விசேட இடங்களில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அடையாள அட்டை இலக்கத்தைப் பரிசீலித்து பயணத்தை மேற்கொள்ள அனுமதித்திருந்ததுடன், இறுதி இலக்கம் ஒற்றை எண்ணில் வருபவர்களுக்குப் பயணத் தடை விதித்து வீடுகளுக்குத் திருப்பி அனுப்பியிருந்தார்கள்.
அந்தவகையில், குழுமாட்டுசந்தி, புதிய பேருந்து நிலையம், குருமன்காடு,
பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.






இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
