பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதிறுக்காராமய விகாரைக்கு பொலிஸார் நிறப்பூச்சு
பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை ஸ்ரீ சம்போதிறுக்காராமய விகாரையை புனரமைக்கும் வேலைப்பாடு மற்றும் நிறப்பூச்சு பூசுகின்ற செயற்பாட்டினை சவளக்கடை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ஆலோசனையில் குறித்த விகாரையில் நேற்று(21) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொசன் தினத்தினை வரவேற்கும் முகமாக பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தன்சல் ஏற்பாடு
மேற்குறித்த செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சவளக்கடை பொலிஸாருக்கு அவ்விகாரையின் பிரதம விகாராதிபதி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்சல் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.