பொலிஸ் மா அதிபரின் கடமை ஊசலாடும் நிலை : தேர்தல் கடமைகளில் பொலிஸார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளை இலங்கையின் பொலிஸார் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று (26) ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தற்போதைய பணிகளுக்கு மேலதிகமாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையத்தை அமைக்கும் திட்டத்தை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்காலத் திட்டங்கள்
தேர்தல் ஆணையத்திடம் இருந்து எழுத்து பூர்வ அறிவிப்பு வந்த பின்னர் இது தொடர்பான மையம் நிறுவப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தேர்தல் கடமைகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்களை ஒருங்கிணைத்து இறுதிப்படுத்துவதற்காக தேர்தல் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நேற்று பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
எனினும். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கடமைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |