ஜனாதிபதி தேர்தலுக்கான பணம்! திறைசேரியின் முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், பணப்புழக்கங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படாத வகையில் பணத்தை விடுவிப்பதற்கு உரிய முறையில் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அனுப்பப்பட்டுள்ள மதிப்பீடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளது.
அச்சிடுதல், பாதுகாப்புப் பணிகள், எரிபொருள், வாக்குப் பெட்டிகள் அமைத்தல் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை விடுவிக்க திறைசேரி தயாராக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவுகள் அதிகரித்தால், நிச்சயமற்ற செயற்பாடுகளுக்கு தற்போது பணம் இருப்பதால், அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |