பத்தரமுல்லை போராட்டத்தின் போது காயத்திற்குள்ளான பொலிஸார் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
பத்தரமுல்லை - இசுருபாய கட்டிடத்திற்கு வெளியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே பொறுப்பு என்று கூறப்படும் செய்திகள் தொடர்பில், விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2ஆம் திகதி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றது.
இந்த அமைதியின்மையின் போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் கூர்மையான ஆயுதத்தால் காயமடைந்தனர்.
இராணுவ அதிகாரி
எவ்வாறாயினும், இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே, தமது தரப்பு ஏற்பட்ட காயங்களுக்கு காரணமானவர் என தலங்கம பொலிஸார் கடுவெல நீதவானிடம் அறிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் தங்களின் விசாரணையில் தெரியவரவில்லை என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த முரண்பாடான செய்திகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் அதிகாரிகள் இராணுவப் புலனாய்வு அதிகாரியின் தொடர்பு குறித்து இத்தகைய கூற்றுக்களை முன்வைத்தார்களா என்பதை விசாரிக்குமாறு, அதிகாரிகளை பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
