பொலிஸ் பொறுப்பதிகாரியின் காணாமல் போன கைத்துப்பாக்கி பாலத்தின் அடியிலிருந்து மீட்பு
எட்டியாந்தோட்டை போக்குவரத்துப் பொறுப்பதிகாரியின் காணாமல் போன கைத்துப்பாக்கி எட்டியாந்தோட்டை பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரியின் காணாமல்போன கைத்துப்பாக்கி தொடர்பில் கிடைத்த கிடைத்த தகவல் ஒன்றையடுத்து எட்டியாந்தோட்டை பாலம் அருகே பொலிஸ் குழுவோன்று தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தது.
பணி நிமித்தம் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி
தேடுதல் நடவடிக்கைக்கு பொலிஸ் கடல் சுழியோடிகள் பிரிவும் வரவழைக்கப்பட்டிருந்தது.
நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் நீருக்கடியில் வீசியெறியப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் காணாமல் போன கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் கைத்துப்பாக்கியின் தோட்டா உறையும் தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தம் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைத் தொலைத்ததற்காக, பொறுப்பதிகாரி கடந்த ஜூன் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பின்னர், ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பசிபிக் பிராந்தியத்தில் பெரும் போர் வெடிக்கும்... அவுஸ்திரேலியாவிற்கு கடுமையான எச்சரிக்கை News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam