அர்ஜுன் அலோசியஸின் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்
அர்ஜுன் அலோசியஸிற்குச் சொந்தமான பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் நேற்று (05.07.2026) மாலை 4.30 மணி முதல் மேலும் 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்
பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் அவசரச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் அவசரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நிறுவனத்திற்கு எதிராக இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
