பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(08.05.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பிலான தகவல்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் என்பதுடன் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan