கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாயம் (Photos)
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புதுஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்றைய தினம் (14.09.2023) அதிகாலை 6.30 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்
இதன்பொழுது அங்கு சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.


அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரில் ஒருவரை காணவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri